Sunday, May 31, 2020

Science Experiment Video Making Competition | விஞ்ஞானப் பரிசோதனை காணொளி தயாரிக்கும் போட்டி

விஞ்ஞானம் சார்ந்த விடயங்களில் காணொளிகளை உருவாக்கி வெற்றி பெறுவோம்.
மாணவர்களின் அறிவியல் சிந்தனை மற்றும் செயற்பாட்டுத் திறனை வளர்ப்பதற்கு சுலைமானியா விஞ்ஞானக் கழகத்தினால் இப் போட்டி ஏற்பாடு செய்யப்படுகிறது.
சுலைமானியா கல்லூரியில் தரம் 6 முதல் தரம் 11 வரை கல்வி கற்கின்ற அனைத்து மாணவர்களும் இப் போட்டியில் பங்குபெற தகுதியுடையவளாவர்.
ஒவ்வொரு தரத்திலும் முதல் மூன்று இடங்களை பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும். பங்கு பெறும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
சிறந்த காணொளிகள் விஞ்ஞானக் கழகத்தின் YouTube Channel இல் பதிவிடப்படும்.
போட்டி நிபந்தனைகள்.
ஒவ்வொரு தரமும் வெவ்வேறு பிரிவுகளாக கருதப்படும். அதாவது போட்டி 6 பிரிவுகளாக நடைபெறும்.
போட்டி தமிழ் மொழிமூலம் கற்கும் மாணவர்களுக்கும் ஆங்கில மொழிமூலம் கற்கும் மாணவர்களுக்கும் பொதுவானதாகும்.
மாணவர்கள் தாம் கற்கும் தரத்தில் விஞ்ஞான பாடத்தில் வரக்கூடிய செயற்பாடுகள் மற்றும் பரிசோதனைகளை மட்டுமே இதற்காக பயன்படுத்திக் கொள்ள முடியும். தனது தரத்திற்கு புறம்பான விடயமொன்றை எடுத்துக்கொள்ள முடியாது. உதாரரணமாக தரம் 8 இல் உள்ள மாணவர் தரம் 7 விஞ்ஞான பாடத்தில் உள்ள விடயமொன்றை பயன்படுத்த முடியாது.
போட்டியில் தனித்தே பங்குபற்ற முடியும்.
விரும்பிய கருவியொன்றின் உதவியுடன் இவ் ஒளிப்பதிவை செய்ய முடியும்.
வீடியோ காட்சி 15 நிமிடங்களை விட அதிகரிக்க முடியாது.
வீடியோ காட்சியை தொடர்ச்சியாக பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
விரும்பியவாறு Editing செய்ய முடியும்.
மாணவர்களது சொந்தக் குரல் கொண்டு செயற்பாடுகளுக்கு விளக்கமளிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
மாணவர்களே செயற்பாடுகளையும் செய்து காட்ட வேண்டும். மாணவர்களின் முகம் தெரிய வேண்டிய அவசியமில்லை.
வீடியோ காட்சிகளை ஒளிப்பதிவு செய்வதற்கும் Editing செய்து கொள்வதற்கும் பெரியவர்களின்உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
தமது வீட்டுச்சூழலிலேயே செயற்பாடுகளை செய்வது மிகப் பொருத்தமானதாகும். அதே போல இலகுவாக கிடைக்கின்ற பொருட்களை பொருட்களைஉபயோகிப்பது ஏற்றதாகும்.
ஒரு மாணவர் எத்தனை காட்சிகளையும் போட்டிக்கு சமர்ப்பிக்கலாம்.
மேலதிக விபரங்கள் தேவைப்படுமிடத்து நடுவர்கள் போட்டியாளர்களை தொடர்பு கொள்வார்கள்.
நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

No comments:

Post a Comment

International Observe the Moon Night நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்களின் சான்றிதழ்கள்

  https://docs.google.com/spreadsheets/u/4/d/e/2PACX-1vQstqcDWypgIk8qvE7CgIz0fvvtluXf2RQO6YecTYS7BTCn88RuAVqzDHLB645v64B__TaS9yTP0n0M/pubhtml