Sunday, July 7, 2019

Nenasa Smart School திட்டத்தில் உள்வாங்கப்பட்ட எமது கல்லூரி

Nenasa  Smart  School செயற்திட்டமானது கல்வி அமைச்சு, Headstart நிறுவனம், Dialog நிறுவனம், Microsoft  Sri Lanka மற்றும் Commercial  வங்கி என்பன இணைந்து செயற்படுத்தும் திட்டமாகும். இத்திட்டமானது மாணவர்களை டிஜிட்டல் மயமாக்கத்தின் உதவியின் மூலம் தமது கல்வியினை முன்னெடுத்துச் செல்லவும் மற்றும் வலுவூட்டும் நோக்கத்துடனும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 




 இதில் எமது சுலைமானியா கல்லூரி தெரிவு செய்யப்பட்டிருப்பது எமது பாடசாலைக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய வரமாகும். இதற்கு  கேகாலை மாவட்டத்தில்  இருந்து 26 பாடசாலைகள் மாத்திரமே தெரிவு செய்யப்ட்டிருந்தன. இதில் 3 பாடசாலைகள் தமிழ் மொழிமூலமானவை. எனவே இந்த செயற்திட்டத்தின் மூலம் எமது கல்லூரி பல பயன்களை பெறவிருக்கின்றது. இதற்காக எமது பாடசாலையில் இருந்து மூன்று ஆசிரியர்கள் Ambassador Teacher ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் ஏனைய ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பரகள். இதன் பயனாக அனைத்து ஆசிரியர்களும் இதன் பயனைப் பெற்று மாணவர்களும் பயன்பெற வழியமைப்பார்கள்.

எனவே இத்திட்டத்தில் எமது பாடசாலையை உள்வாங்கிமைக்கு மேற்படி நிறுவனங்களுக்கு நாம் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.



No comments:

Post a Comment

International Observe the Moon Night நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்களின் சான்றிதழ்கள்

  https://docs.google.com/spreadsheets/u/4/d/e/2PACX-1vQstqcDWypgIk8qvE7CgIz0fvvtluXf2RQO6YecTYS7BTCn88RuAVqzDHLB645v64B__TaS9yTP0n0M/pubhtml